27 August 2010

இஸ்லாமிய சமூகம் தொடர்பாண மேற்குலக நாடுகளின் போக்கு மாறவேண்டும் - ஹனீபா வலியுறுத்து



Nkw;Fyf ehLfs; ,];yhkpa r%fk; njhlu;ghd filgpbf;Fk; fLk; Nghf;fpid vjp;u;fhyj;jpy; khw;wpaikg;gjd; %yk; rkhjhdkpf;f cyfj;ij fl;bnaOg;g KbAk; vd my; ,];yhk; gj;jpupifapd; MrpupaUk; rpNyhd; xg;Nrtu; gj;jpupifapd; Kd;dhs; MrpupaUkhd `dpgh typAWj;jpdhu;

New;W ,yq;if ,jopay; fy;Y}upapy; eilngw;w uk;ohd; epfo;tpy; fye;Jnfhz;L ciuahw;Wk; NghJ ,t;thW Fwpg;gpl;lhu;. Nkw;Fyf ehLfs; ,];yhkpa r%fk; kw;Wk; K];ypk; kf;fis %d;whk; ju kf;fshf fUjp gy;NtW mlf;F KiwfisAk; fLk; Nghf;fpidAk; eilKiwg;gLj;jp tUfpd;wdu; ,e;j Neuj;jpy; Nkw;Fyf ehLfspy; fhzg;gLk; gpugy;a Clf epWtdq;fSk; ,t;thwhd Nghf;fpid jkJ nra;jpfspy; cl;GFj;jp ,Uf;Fk; nrayhdJ r%fj;jpy; xU FOtpdiu jho;;j;Jk; Nehf;fhfNt fUjNtz;bAs;sJ. ,e;j epWtdq;fs; gf;fr;rhu;gpd;wp nraw;gLtjd; %yNk cynfq;Fk; rkhjhdKk; kfpo;r;rpAk; kpf;f [dehafj;ij epiyehl;l KbAk; vd;whu;.

,NjNtis ,e;j ciuap;y; Nkw;Fyf ehLfspd; fle;jfhy nraw;ghLfis Rl;bf;fhl;baNjhL vjpu;fhyj;jpy; Clftpay; Jiwapy; fhyb gjpf;Fk; ,sk; r%fj;jpdu; ,e;j epiyia ed;F czu;e;J ,e;epiyik Kw;wpYkhf khWgl ciof;f Ntz;Lk; vd Nfl;Lf;nfhz;lhu;.

,e;j epfo;tpy; Clftpay; khztu;fs; Mrpupau;fs; kw;Wk; gj;jpupif Kiwg;gl;Lf;FOtpd; mjpfhupfs; gioa khztu;fs; cl;gl gyu; fye;Jnfhz;ldu;.

25 August 2010

ஐ.நாவுக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமனம்

ஐ.நாவுக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளை சுட்டுக்கொல்லும் உத்தரவை அவர் பெற்றதாக சரத் பொன்சேகா தெரிவித்ததாக செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
58 ஆவது படைப்பிரிவுத் தளபதியாக விளங்கிய மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் பெயரும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகாவினால் வழங்கப்பட்ட செவ்வியொன்றில் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.முன்னாள் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பந்துல ஜயசேகரவிடமிருந்து கடமைகளைப் பொறுப்பேற்றபின், இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐ.நா. எழுப்பிய கரிசனைகள் விவகாரத்தை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சீராக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

17 August 2010

ரவி சஜித் - ரணிலுடன் சந்திப்பு



ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று மாலை கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர். கட்சியின் தலைமைப் பதவி உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இக்கலந்துரையாடல் இன்றும் தொடரும் எனக் கூறப்படுகிறது .

கப்பல் அகதிகள் மீது விசாரணை ஆரம்பம்


எம்.வி. சன் ஸீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்த சுமார் 500 இலங்கைத் தமிழர்கள் உண்மையான அகதிகளா என்பது குறித்த விசாரணைகளை கனேடிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.மேற்படி அகதிகள் தற்போது வான்கூவரிலுள்ள தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமது அடையாளத்தை - தாம் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதே - அகதிகள் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினை என தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாளப்பிள்ளை தெரிவித்துள்ளார்.சிரமமான நீண்ட பயணத்தின் பின்னர் கனடா வந்தடைந்த அகதிகளை தடுப்பு நிலையங்களில் தடுத்து வைத்திருப்பது அவர்களுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

16 August 2010

கூட்டமைப்புக்கு பதிவு தபாலில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது -எம்.கே.சிவாஜிலிங்கம்


கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஐந்தாவது கூட்டத்திற்கான அழைப்பிதழ் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்ல முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பப்பட்டதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தற்போது நாட்டில் இல்லாத காரணத்தினால் அவ்வழைப்பிதழ் கிடைக்காமல் இருந்திருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
எனினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகள் அரங்கத்தின் தூதுக்குழுவொன்று சந்தித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் கட்சிகளின் அரங்கத்திலிருந்து கலந்துகொள்ளவதற்கான எவ்வித அழைப்பிதழும் தமது கட்சிக்கு கிடைக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தையில் மனித மண்டையோடுகள் கண்டுபிடிப்பு


ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்குளம் காட்டுப் பகுதியிலிருந்து மனித மண்டையோடுகளும் எலும்புக்கூடுகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினராலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றுடன், சீருடைகளும் சயினைட்டு குப்பிகள் சிலவும் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இதனையடுத்து அங்கு சென்ற மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா, கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டார். இந்நிலையில் மேற்படி, எழும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராட்டம் - ஜே.வி.பி தெரிவிப்பு


அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஜனநாயக சக்திகளுடன் இணைந்து முன்னணியொன்றை அமைத்து போராடப்போவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கருத்துத் தெரிவிக்கையில், இவ்விடயம் குறித்து பிற கட்சிகள், சிவில் அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவனவற்றுடன் ஏற்கெனவே ஜே.வி.பி. பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாகக் கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார, மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே ஆகியோர் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமையை மீறி காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்கிறது கூட்டமைப்பு


தமிழ் கட்சிகளின் அரங்கத்திலிருந்து கலந்துரையாடுவதற்கான எவ்வித அழைப்பிதழ் எதுவும் இதுவரையில் தமது கட்சிக்கு கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.
தனிப்பட்ட காரணத்திற்காக இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்க் கட்சிகள் ஒன்றினைந்த ‘‘தமிழ்க் கட்சிகளின் அரங்கம்’’ ஐந்தாவது தடவையாக மட்டக்களப்பில் கடநத சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியது.
இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம், ஈ.பி.ஆர்.எல்.எப் (நாபா), டெலோ மற்றும் புளொட், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு முதலான கட்சிகள் கலந்துக்கொண்டன.
இதன்போது தமழ் மக்கள் எதிர்நோக்குகின்ற தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன் அவற்றை அரசாங்கத்தின் கவனததிற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு பெற்றுக்கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.